
சீருடையுடன் பாஜகவில் இணைந்த இரு காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 27 ஆம் தேதி நாகை மாவட்டத்தில் நடைப்பயணத்தின் போது பாஜக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இது தொடர்பான விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது.
இதனால் காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திரன், கார்த்திகேயன் சீருடையில் இருந்தவாறு பாஜகவில் இணைந்ததால் இருவரும் நாகை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், தஞ்சை சரக டிஐஜி உத்தரவின்பேரில் ராஜேந்திரன், கார்த்திகேயன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.