
சென்னை: 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பபாசி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறவுள்ள 47-ஆவது சென்னை புத்தகக் காட்சியை இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி வைத்து, கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிற்பகல் 3 மணிக்கு புத்தகக் காட்சியை திறந்து வைக்கவுள்ளதாக பபாசி தற்போது அறிவித்துள்ளது.
தொடர்ந்து, கலைஞா் பொற்கிழி விருதுகள், பபாசி வழங்கும் விருதுகள் ஆகியவற்றை வழங்கி தொடக்க விழாவில் சிறப்புரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.