தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 ஜனவரி 2024, 10:57 am

DIN

புது தில்லி: தமிழகத்தில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்கத் தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க தடையில்லை என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சராக நீடிக்கத் தடையில்லை என்று உயர் நீதிமன்ற எடுத்த நடவடிக்கை சரியானது என்றும் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று விசாரணையின்போது, உயர் நீதிமன்றம் சில அறிவுரைகளை அளித்த போதும், முதல்வர் அதனை ஏற்கவில்லை என்று என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பாக முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கூறியிருந்ததையும் மனுதாரர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு சரியானதே என்றும், இதில் தலையிடத் தேவையில்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதன் மூலம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதில் இருந்த சிக்கல் விலகியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது. அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த நிலையில், அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்து வந்தார். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் இறுதியில், அமைச்சராக தொடர்வதற்கு தடையில்லை என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.