உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு?

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024: எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு?


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் முதல் நாளில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலா் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் இலக்கு நிா்ணயித்துள்ளாா். அதற்காக சிங்கப்பூா், ஜப்பான் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு முதல்வா் நேரில் சென்று முதலீடுகளை ஈா்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டாா். 

அதன் தொடா்ச்சியாக, தற்போது தமிழக அரசின் சாா்பில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் 2 நாள்கள் நடைபெறும் உலக முதலீட்டாளா்கள் மாநாட்டை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (ஜன.7) காலை தொடக்கிவைத்தார்.

இந்த மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்காக ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்க்க அரசு திட்டமிட்டிருந்தது. 

இந்த நிலையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.5.5 இலட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. 

100-க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என தமிழக தொழில்துறை செயலர் அருண் ராய் தெரிவித்துள்ளார்.

ஹூண்டாய், ஓலா, கோத்ரேஜ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கவும், விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதுவரை பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை அறிவித்துள்ளது. 

டாடா எலெக்ட்ரானிக்ஸ், பெகட்ரான், மிட்சுபிஷி, ஹுண்டாய், ஜேஎஸ்டபுள்யு, வின்பாஸ்ட் ஆகிய முக்கிய நிறுவனங்களின் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

முதல் பத்து முதலீடு நிறுவனங்கள் விவரம்:

* வின்பாஸ்ட்:
முதலீடு: ரூ.16,000 கோடி 
வேலை வாய்ப்பு: 40,500 பேர் 
இடம்: தூத்துக்குடி

* டாடா எலெக்ட்ரானிக்ஸ்:
முதலீடு:  ரூ.12,082 கோடி 
வேலை வாய்ப்பு: 40,500 பேர் 
இடம்: கிருஷ்ணகிரி

* ஜேஎஸ்டபுள்யு
முதலீடு: ரூ.12000 கோடி 
வேலை வாய்ப்பு: 6,600 பேர்
இடம்: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி

* ஹுண்டாய்
முதலீடு: ரூ.6,180 கோடி 
இடம்: காஞ்சிபுரம்

* சோலார்
முதலீடு: ரூ.5600 கோடி  
வேலை வாய்ப்பு: 1,100 பேர் 
இடம்: காஞ்சிபுரம்

* டிவிஎஸ் குழுமம்
முதலீடு ரூ.5,000 கோடி 
வேலை வாய்ப்பு: 500 பேர்

* பெகட்ரான்
முதலீடு: ரூ.1000 கோடி 
வேலை வாய்ப்பு: 8000 பேர் 
இடம்: செங்கல்பட்டு

* கோத்ரேஜ்
முதலீடு: ரூ.515 கோடி
இடம்: செங்கல்பட்டு

* மிட்சுபிஷி
முதலீடு: ரூ.200 கோடி 
வேலை வாய்ப்பு: 50 பேர் 
இடம்: திருவள்ளூர்

* குவால்காம்
முதலீடு: ரூ.177 கோடி
வேலைவாய்ப்பு: 1600 பேர்
இடம்: சென்னை

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல நிறுவனங்கள் கவனம் ஈர்க்கும் வகையிலான முதலீட்டை அறிவித்தன. அதில், அதிகம் கவனம் ஈர்த்தது வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ரூ.16000 கோடி முதலீடு. இந்நிறுவனம் தூத்துக்குடியில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மையத்தை தொடங்கவுள்ளது.

இந்த நிறுவனங்களின் முதலீடுகள் மூலம் தமிழ்நாட்டில் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com