சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளி, கல்லூரிகள் செயல்படும்

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 10 மணி வரை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு லேசான தூரல் மட்டுமே போட்டதால், இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அம்மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.

அதேவேளையில், தொடர் கனமழை காரணமாக அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காரைக்கால், செங்கல்பட்டு, மாவட்டங்களில் இன்று (ஜன.08) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜன.08) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலும், கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலும் 22 செ.மீ. மழை பதிவாகியுள்ளது!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com