வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்

வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சிவசங்கா்
அமைச்சர் சிவசங்கா்

வேலைநிறுத்தம் நடைபெற்றாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக பல்வேறு போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. 

போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கு அகவிலைப் படியை உயா்த்த வேண்டும்; பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்; அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எப், பிஎம்எஸ் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து இருந்தன. 

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் சிவசங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், அமைச்சர் சிவசங்கர்  கூறுகையில், "தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும் பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். மக்கள் எந்தவொரு சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடுகள் செய்து தரப்படும்" என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com