தி நகர் பேருந்து நிலையம்
தி நகர் பேருந்து நிலையம்

தமிழகத்தில் 93%; சென்னையில் 103% பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் 92.96 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: தமிழகத்தில் 92.96 சதவிகித அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துக் கழகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

ஊதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இன்றுமுதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாத தொழிற்சங்க ஓட்டுநர்களை வைத்து முழு அளவிலான பேருந்துகளை இயக்க மாவட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

அதன்படி, போலீஸ் பாதுகாப்புடன் இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் வழக்கமாக இயக்கப்படும் 9,452 பேருந்துகளில் 8,787 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படும் 2,025 பேருந்துகளைவிட கூடுதலாக 73 பேருந்துகள்(103.60) இன்று இயக்கப்பட்டு வருகின்றது.

விழுப்புரம் கோட்டத்தில் 76.50%, சேலம் கோட்டத்தில் 96.99%, கோவை கோட்டத்தில் 95.48%, கும்பகோஅம் கோட்டத்தில் 82.98%, மதுரை கோட்டத்தில் 97.41%, திருநெல்வேலி கோட்டத்தில் 100% பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துக் கழகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com