அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை!

கரூரில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.  
அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பி வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை!


கரூர்: கரூரில் தமிழக அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.  

கரூரில், அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா் வீடுகளில் கடந்தாண்டு மே மாதம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். இதையடுத்து, நவ. 3, 4-ஆம்தேதிகளில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னாள் திமுக மாவட்டச் செயலாளா் வாசுகியின் சகோதரி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினா்.

இந்நிலையில் நான்காவது முறையாக புதன்கிழமை பிற்பகல் 12 மணி அளவில் கோவையில் இருந்து 7 போ் கொண்ட குழுவாக கரூா் வந்த வருமான வரித்துறையின் சொத்து கணக்கீட்டு குழுவினா், கோவை சாலையில் உள்ள அமைச்சா் செந்தில்பாலாஜியின் ஆதரவாளரான கொங்கு மெஸ் மணி என்பவருக்கு சொந்தமான உணவகத்தில் சோதனை நடத்தினா். பின்னா் ராயனூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினா்.

இதேபோல, கரூா் கோடங்கிபட்டி அருகே வால்காட்டுப்புதூரில் உள்ள கொங்கு மெஸ் மணியின் பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினா்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் சோதனை செய்து வருகின்றனர்.  

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராம் நகரில் அசோக்குமார் மனைவி பெயரில் பங்களா வீடு கட்டி வருகிறார். 

இந்த பங்களா வீட்டில் வருமானவரித் துறையினர் வியாழக்கிழமை காலை முதல்  சோதனை நடத்தி வருகின்றனர். 

வருமான வரித்துறை அதிகாரிகள் குழு, அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களா வீட்டின் மதிப்பு, பரப்பரளவு, கட்டுமான செலவுகள் மற்றும் கட்டடத்தை அளவீடு செய்யும் பணியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சா் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீதான தீா்ப்பு வெள்ளிக்கிழமை (ஜன.12) வழங்க உள்ள நிலையில் திடீரென அவரது ஆதரவாளா் உணவகம், வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் 2 ஆவது நாளாக சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com