டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!


சென்னை: தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

நகராட்சி ஆணையர், துணைப் பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு உதவியாளர், காவல் துறையின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிறப்புக் கிளை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தோ்வு கடந்த பிப். 25-ஆம் தேதி நடைபெற்றது. கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தத் தோ்வை 51 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதினா்.

இந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதமானதை அடுத்து அனைத்து தரப்பிலும் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு கோரிக்கை வலுத்து வந்தது.  

ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12- ஆம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகளை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒரு நாள் முன்னதாகவே www.tnpsc.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

தேர்ச்சி பெற்றோர் அடுத்த கட்ட தேர்வான நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

குரூப் 2ஏ (நேர்முகத் தேர்வு அல்லாத பணிகள்) தேர்வு முடிவுகளில் பணி கிடைப்பதற்கான அடுத்தக் கட்டத்துக்கு தேர்ச்சி பெற்றுள்ளோமோ என்பதை தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அவர்களது பதிவெண், பிறந்த தேதி விவரம் மற்றும் கேப்ச்சா ஆகியவற்றை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். 

தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com