பொங்கல் பண்டிகை: ஒரு கிலோ மதுரை மல்லி ரூ. 3,000-க்கு விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மதுரை மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.
மலர் சந்தையில்  ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ள மதுரை மல்லிகைப் பூ.
மலர் சந்தையில்  ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ள மதுரை மல்லிகைப் பூ.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை சந்தைகளில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000-க்கு விற்பனையாகிறது.

மதுரை மாட்டுத்தாவணி, மலர் சந்தையில் வெள்ளக்கிழமை வரை ரூ.1000-க்கு விற்பனையான பூக்கள் விலை சனிக்கிழமை ரூ.3000 வரை விலை அதிகரித்துள்ளது.

மல்லிகைப் பூ ஒரு கிலோ ரூ. 3000-க்கும், பிச்சிப்பூ மற்றும் முல்லை ஆகிய பூக்கள் கிலோ ரூ.2000-க்கும், மெட்ராஸ் மல்லி கிலோ ரூ.2000-க்கும், சம்மங்கி , செவ்வந்தி கிலோ ரூ.250-க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.450-க்கும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.300-க்கும், பட்டன் ரோஸ் கிலோ ரூ. 250-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளிக்கிழமை மல்லிகை கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை கிலோ ரூ.3,000 ஆக விலை அதிகரித்துள்ளது. இதேபோன்று முல்லை மற்றும் பிச்சி  பூ கிலோ ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் சனிக்கிழமை கிலோ ரூ.2,000 ஆக விலை அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com