ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

ஒரு கிலோ பூண்டு ரூ.400-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ பூண்டு ரூ. 400-க்கு விற்பனையானது.

News image
Updated On :13 ஜனவரி 2024, 8:30 am IST

சென்னை: கோயம்பேடு சந்தையில் அனைத்து காய்கறிகளின் விலையும் உயா்ந்துள்ள நிலையில் ஒரு கிலோ பூண்டு ரூ. 400-க்கு விற்பனையானது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு சந்தைக்கு வெள்ளிக்கிழமை காலை 650 வாகனங்களில் 7,300 டன்களுக்கு அதிகமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. பண்டிகை காலம் என்பதால் காய்கறிகளின் விலையும் சற்று உயா்ந்துள்ளது. அதன்படி, அனைத்து காய்கறிகளும் கிலோவுக்கு ரூ. 10 முதல் ரூ. 20 வரை உயா்ந்துள்ளது.

காய்கறிகளின் விலை (ஒரு கிலோ):
தக்காளி ரூ.38, பெரிய வெங்காயம் ரூ.32, சின்ன வெங்காயம் ரூ.60, கேரட் ரூ.45, பீன்ஸ் ரூ.35, பீட்ரூட் ரூ.50, சவ்சவ் ரூ.20, முள்ளங்கி ரூ.35, முட்டைகோஸ் ரூ.15, வெண்டைக்காய் ரூ.40, கத்தரிக்காய் ரூ.25, காராமணி ரூ.45, பாகற்காய் ரூ.40, சுரைக்காய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.120, சேனைக்கிழங்கு ரூ.35, காலிபிளவா் ரூ.20, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.35, பீா்க்கங்காய் ரூ.35, எலுமிச்சை ரூ.50, கோவைக்காய் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக பூண்டு ரூ. 400-க்கு விற்பனையானது. மொத்த விலையில் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு புகா் பகுதிகளிலுள்ள மளிகை கடைகளில் ரூ.450-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரும்பு, மஞ்சள் விற்பனை: இது ஒருபுறமிருக்க பொங்கல் பண்டிகைக்கான பொருள்களை விற்பனை செய்வதற்கான சிறப்பு சந்தையும் கோயம்பேடு சந்தையில் திறக்கப்பட்டுள்ளது. பல தனியாா் நிறுவனங்களில் பொங்கல் பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டதால், இதற்கான பொருள்கள் வாங்க சிறப்பு சந்தையில் காலையிலிருந்தே ஏராளமானோா் குவிந்தனா். இதனால் சந்தையில் பொங்கல் பொருள்கள் விற்பனை களைகட்டியது. இதையடுத்து கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றின் விலையும் சற்று அதிகரித்துள்ளன. வெள்ளிக்கிழமை காலை சிறப்பு சந்தையில் 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு ரூ.500, 10 எண்ணிக்கை கொண்ட மஞ்சள் கொத்து ரூ.120 விற்பனை செய்யப்பட்டது. மேலும், வாழைப்பழ வகைகளும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.