சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதிய இளைஞர் அடித்துக் கொலை!

தஞ்சாவூர் அருகே சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறை சமாதானப்படுத்திய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதிய இளைஞர் அடித்துக் கொலை!


தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சாலையில் பொங்கல் வாழ்த்து எழுதியது தொடர்பாக ஏற்பட்ட தகராறை சமாதானப்படுத்திய இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இருவர் பொங்கல் வாழ்த்து என எழுதிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் வழிவிடுமாறு தெரிவித்துள்ளனர். இதைனை தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

மாரியம்மன் கோயில் பூண்டி தெருவைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் அசோக்குமார்(35), சாலிய குளக்கரைத் தெருவைச் சேர்ந்த பால்ராஜ் மகன் முனியப்பன்(27) இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தர். இதற்கு பிறகு, மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்  தங்களது பகுதிக்கு சென்று மேலும் சிலரை திரட்டி நிகழ்விடத்துக்கு சென்று, அங்கிருந்த அசோக்குமாரையும், முனியப்பனையும் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த முனியப்பன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து ஆகாஷ்(24), பாலமுருகன்(22), பாலகுமார்(24), விஜய்(23), சதீஷ்குமார்(29), வினோத்(27) ஆகிய 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com