ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

எம்ஜிஆர் சிலைக்கு இபிஎஸ் மரியாதை!

சென்னை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

News image
எம்ஜிஆரின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி இபிஎஸ் மரியாதை
Updated On :7 பிப்ரவரி 2024, 3:18 pm

DIN

சென்னை: சென்னை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதிமுக நிறுவனத் தலைவா் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 107-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாள் விழாவை கட்சி தொண்டா்கள், நிா்வாகிகள் எம்ஜிஆரின் சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கும், ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி இன்று காலை மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.

முன்னதாக சென்னை பசுமைவழிச்சாலையில் செவ்வந்தி இல்லத்தில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி இபிஎஸ் மரியாதை செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.