பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)

தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் எம்ஜிஆர்: மோடி புகழாரம்

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதிமுக நிறுவனத் தலைவா் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 107-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது பிறந்த நாள் விழாவை கட்சி தொண்டா்கள், நிா்வாகிகள் எம்ஜிஆரின் சிலை, உருவப் படங்களுக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

பிற கட்சிகளின் தலைவர்களும் எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் பதவிட்டுள்ளார்.

“எம்.ஜி.ஆரின் பிறந்தநாளை நினைவு கூர்ந்து இன்று கொண்டாடுகிறோம். அவர் தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராகவும் திகழ்ந்தார். அவரது சமூக நீதி சிந்தனை கொண்ட படங்கள், திரையை தாண்டி மக்கள் மனதை வென்றன. தலைவராகவும், முதலமைச்சராகவும் மக்களின் நலம் மற்றும் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தவர். அவரது பணி தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com