புதுக்கோட்டை மண்டையூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்!

புதுக்கோட்டை மண்டையூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மண்டையூர் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடக்கம்!

புதுக்கோட்டை மண்டையூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மண்டையூரில் இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியை, திமுக மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன், திமுக பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன், கோட்டாட்சியர் தெய்வநாயகி ஆகியோர் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். 

இதையடுத்து, போட்டி தொடங்கியதால் காளைகளை அவிழ்த்துவிடுமாறு மாடுபிடி வீரர்கள் அறிவுறுத்தினர். அப்போது விழா கமிட்டியை சேர்ந்த குறிப்பிட்ட சிலர் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வந்த பின்பு தான் மாடுகளை அவிழ்க்க முடியும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதனால் ஒன்றரை மணி நேரமாக நிறுத்தப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்டிஓ, திமுக மற்றும் அதிமுகவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தியநிலையில், அதில்  முடிவு எடுக்கப்பட்ட பின்னர் போட்டி தொடங்கப்பட்டது. 

தற்போது காளைகள் அவிழ்க்கப்பட்டு வீரர்கள் காளைகளை அடக்கி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com