இன்று மாலை சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

சேலத்தில் நாளை நடைபெறவுள்ள 2-வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். 
இன்று மாலை சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
இன்று மாலை சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சேலத்தில் நாளை நடைபெறவுள்ள 2-வது திமுக இளைஞரணி மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சேலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். 

சேலம் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து இன்று மாலை விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்கின்றனர். 

இன்று மாலை 5 மணிக்கு சேலம் விமான நிலையத்துக்கு வரும் முதல்வரை வரவேற்பு அளிக்கச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

மாநாட்டு திடலுக்குச் சென்று இருசக்கர வாகன பேரணியையும், ட்ரோன் ஒளிக் காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்துப் பார்வையிட உள்ளார். 

இந்த மாநாட்டில் முக்கிய தலைவர்கள் உள்பட 5 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சேலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com