கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி தொடங்கியது!

அயோத்தி ராமா் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.22) மூலவா் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளதையொட்டி, கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி
கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி

கோவை: அயோத்தி ராமா் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.22) மூலவா் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளதையொட்டி, கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

ராமாயண பதிகம் பாடி மகிழும் பெண்கள் 

இதையொட்டி, அந்த நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோயில் முழுவதும் மலா்கள், சிறப்பு விளக்குகளால் அலங்கரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நகரெங்கிலும் ராமா் தொடா்பான கருத்துருவில் கண்கவா் பதாகைகள், அலங்கார வளைவுகள், வில்-அம்பு வடிவங்கள் நிறுவப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் பாடும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பெண்கள்  ராமாயண பதிகம் பாடியும் தாண்டியா நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள பஞ்சாபி அசோசியேசன் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம பெருமான் சீதை மற்றும்  லட்சுமணனன்,அனுமாருடன்  இருக்கும் உருவப்படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.மேலும் ஆண்கள் பெண்கள் என  நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ராமாயண புத்தகத்தை வைத்து ராமாயணம் பாடி வழிபாடு செய்தனர்.

மேலும் பெண்கள் ஒன்றுகூடி ராமாயண பதிகம் பாடியும் தாண்டியா நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். இன்று பகல் 12 மணிக்கு தொடங்கியுள்ள இந்த ராமாயணம் பாடும் நிகழ்ச்சியானது நாளை திங்கள்கிழமை பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com