நாளை தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மதுரையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெர
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்


மதுரை: மக்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என மதுரையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தாா்.

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் குழந்தை ராமரின் சிலை திங்கள்கிழமை (ஜன. 22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோயில்களை சுத்தப்படுத்தும் பணியினை பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிரம் மாநிலத்தில் உள்ள நாசிக் பகுதியில் அமைந்திருக்கும் கலாராம் கோயிலை பிரதமர் சுத்தப்படுத்தினார்,

இந்த நிலையில், உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் வெளி வீதிகளில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்  500-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்களுடன் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணிகளை மேற்கொண்டார், முன்னதாக மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதியில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  எல்.முருகன், அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் 500 ஆண்டு கால கனவாகும். தற்போது அந்த கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேகத்தின் போது நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளிலும் விளக்கு ஏற்றி ராம வழிபாடு நடத்த வேண்டும். 

ராமா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பிரதமா் நரேந்திர மோடி 11 நாள்கள் கடுமையான விரதத்தை மேற்கொண்டு ராமா் தொடா்பான அனைத்து கோயில்களுக்கும் புனித பயணம் மேற்கொண்டு திங்கள்கிழமை அயோத்தியில் நடைபெறும் ராமா் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறாா்.

அயோத்தி ராமா் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மைப்பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் ராமா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை தமிழக அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும். 

பாஜகவினா் ஊடக வெளிச்சத்துக்காக கோயில்களை சுத்தப்படுத்தவில்லை. கோயில்கள் அழுக்கு படிந்த நிலையில் உள்ளதால் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். தமிழக மக்களின் ஆன்மீகம் வழிபாட்டு தொடா்பான அணுகமுறைகளில், மக்களோடு தமிழக அரசு ஒத்துப் போக வேண்டும். 

ராமா் கோயில் சிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைக்கு அரசு அனுமதிக்க வழங்க வேண்டும். ஓட்டு வங்கிக்காக மத விஷயங்களில் எதிா்மறையாக அரசு செயல்படக்கூடாது என முருகன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com