அயோத்தி சிலை பிரதிஷ்டை நேரலை செய்யலாம்: உயர் நீதிமன்றம் 

அயோத்தி சிலை பிரதிஷ்டை நிகழ்வை கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அயோத்தி சிலை பிரதிஷ்டை நேரலை செய்யலாம்: உயர் நீதிமன்றம் 


சென்னை: அயோத்தி சிலை பிரதிஷ்டை நிகழ்வை கோயில்கள், மண்டபங்களில் நேரலை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மண்டபத்தில் அயோத்தி சிலை பிரதிஷ்டையை நேரலை செய்ய அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அப்போது, ராமர் கோயில் திறப்பை நேரலை செய்யவோ, பூஜை செய்யவோ காவல்துறையின் அனுமதி தேவையில்லை. தனியார் மண்டபங்கள், கோயில்களில் நேரலை செய்ய யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை. அறநிலையத் துறை கோயில்களில் பூஜை மற்றும் நேரலை செய்ய கோயில் செயல் அலுவலரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. அயோத்தி பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்ய உரிய நெறிமுறைகளை கவனித்து கோயில் செயல் அலுவலர்கள் உரிய கட்டுப்பாடுகளுடன் அனுமதி தர வேண்டும். நேரலை செய்யப்படும் இடங்களில் ஒருவேளை கூட்டம் அதிகரித்தால், அங்கு பாதுகாப்புப் பணியை காவல்துறையினர் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com