திருச்சி: சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுகவின் இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாடு, அரசியல் அறிக்கைக்காக மட்டுமல்ல, லட்சக்கணக்கான திமுக தொண்டர்களை திருப்திபடுத்திய மதிய உணவுக்காகவும் பேசுபொருளாகி உள்ளது.
உணவின் தரம் மற்றும் பேக்கேஜிங் ஒருபுறம் இருக்க, ஒரு பருக்கைக் கூட வீணாகவில்லை என்பதை உறுதிசெய்து, மாநாட்டு ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான கே.என்.நேரு மற்றும் உணவுப் பிரிவை கையாண்ட திருச்சியைச் சேர்ந்த குழுவிற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துள்ளன.
மட்டன் பிரியாணி, வறுத்த சிக்கன் மற்றும் தயிர் சாதம் அடங்கிய சிறப்பாக பேக்கிங் செய்யப்பட்ட உணவுத் தட்டுகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன. உணவை சுவைத்தவர்கள் தரப்பில், சுவை மற்றும் பேக்கேஜிங் குறித்த பாராட்டுகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ளன.
திருச்சியைச் சேர்ந்த பிரியாணி குழுமம், மாநாட்டில் உணவு தயாரித்தல் மற்றும் விநியோகம் செய்யும் பொறுப்பை பெற்றிருந்தது. 5,000 பணியாளர்களைக் கொண்டு இவை அனைத்தையும் அந்த குழுமம் சாத்தியமாக்கியது.
இது குறித்து அந்த குழுமத்தினர் கூறுகையில், “சமையல் ஏற்பாடுகள் மற்றும் உணவு விநியோகத்திற்கான திட்டத்தை வகுக்க எங்கள் குழு மாநாட்டிற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக இடத்தை அடைந்தது. பயன்படுத்தப்படும் ஒவ்வொரு உணவுப் பொருள்களும் தரத்தில் சமரசம் செய்யாமல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகவே பெறப்பட்டன.
இதையும் படிக்க..ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்ற செலவு இத்தனை கோடியா?
ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் காம்போ உணவுத் தட்டுகள் தயாராக இருந்தன. அதன்பிறகு, 20 கவுண்டர்கள் மூலம் விநியோகிக்கத் தொடங்கினோம் என்கிறார்கள். மேலும், ஒரு பருக்கைக் கூட வீணாக்கப்படவில்லை என்று அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்கள்.
மாநாட்டின் போது, “மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு” என்று மாநாட்டின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் கே.என். நேருவின் நிர்வாகத் திறமையைப் பாராட்டி, விரிவாகவும் பேசியிருந்தார். அதை அந்த மாநாட்டிலேயே நேரு மீண்டும் ஒரு முறை நிரூபித்துக்காட்டினார்.
விரயத்தைத் தவிர்க்க, நாங்கள் கேட்டரிங் குழுவிடம் உணவுகளை பெட்டிகளில் வழங்கச் சொன்னோம். சுமார் மூன்று லட்சம் பேருக்கு உணவு வழங்க தயாராக இருந்தோம். ஆனால் நாங்கள் எதிர்பார்த்ததை விட சுமார் 6 லட்சம் பேர் வந்திருந்தனர். எங்கள் குழு, மாற்றுத் திட்டத்தின்படி சென்று, ரொட்டி பாக்கெட்டுகள், தின்பண்டங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை ஏற்பாடு செய்தோம். உணவு விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக நான் பலமுறை சாப்பாட்டு அறைக்குச் சென்றேன்” என்று அமைச்சர் நேரு இது பற்றி தெரிவித்துள்ளார்.
சேலம் மாநாட்டில் கலந்து கொண்ட திருச்சியைச் சேர்ந்த திமுக தொண்டர் ஒருவர் பேசுகையில், “இவை அனைத்தும் முடிந்தவரை சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் மாநாட்டில் உணவுப் பொருள்களை மலை போல தூக்கி எறியப்பட்டதைப் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்பதால் மகிழ்ச்சியடைகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: தஞ்சாவூா் ஆட்சியா் காத்திருந்து வாக்களிப்பு

அரசுப் பேருந்து மோதி பெண் உயிரிழப்பு

திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா் நம்பிக்கை

தமிழ் மண்ணில் மதவாத வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை: தொல். திருமாவளவன்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


