மம்தாவின் அறிவிப்பு இந்தியா கூட்டணிக்கு பின்னடைவா? தினமணிக்கு சசி தரூர் பேட்டி!

மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடும் மம்தாவின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தினமணி இணையதள செய்திப் பிரிவுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

சென்னை: மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டியிடும் மம்தாவின் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தினமணி இணையதள செய்திப் பிரிவுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் நடத்தப்படும் கல்விச் சிந்தனை அரங்கு இன்று காலை தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கின் முதல் நாளில் ‘தேர்தல் 2024’ என்ற தலைப்பில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பங்கேற்று உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தினமணி இணையதளப் பிரிவுக்கு அவர் அளித்த பேட்டி:

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

இந்தியாவை போன்ற பெரிய நாட்டில் ஒவ்வொரு மாநிலத்துக்கு மாநிலம் அரசியல் நிலைகள் வேறுபடும். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் கண்டிப்பாகத் தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளாது. ஆனால் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் ஒரே கூட்டணிக்குள் உள்ளன. அவைகளுக்குள் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை. மாநிலங்களில் இரு கட்சிகளுக்கு இடையேயும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாமல் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்கு பிறகு ‘இந்தியா’ கூட்டணிக்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.

மம்தாவின் அறிவிப்பு மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமா?

எந்தக் கூட்டணியாக இருந்தாலும் ஒரு கட்சி ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துவது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை. கடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட அதிமுக, தற்போது தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தியா கூட்டணிக்குள் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவது தவிர்க்கக்கூடிய ஒன்றே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com