‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

திருச்சியில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் உதயநிதி!

திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

News image
Updated On :25 ஜனவரி 2024, 6:49 am

DIN


திருச்சி: திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் டிவிஎஸ் டோல்கேட்டில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு 8 அடிய உயர முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. 

இந்த சிலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை காலை சென்னையில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய உதயநிதி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி சிலைகளை கண்டாலே சிலருக்கு இப்போதெல்லாம் வயிறு எரிகிறது. 

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 40க்கும் 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் வேண்டும் என்ற உறுதி மொழியை கருணாநிதி சிலை முன்பு உறுதியேற்போம் என உதயிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.