
திரையிசைப் பாடகி பவதாரணி உடல் இலங்கையிலிருந்து விமானம் மூலம் இன்று மாலை 4 மணியளவில் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்திலிருந்து தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் நேற்று காலமானாா்.
பவதாரணி உடல்நலப் பாதிப்புக்காக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆயுா்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தாா். சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று மாலை உயிரிழந்தார்.
அவரது உடல் இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் இருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடற்கூராய்வுக்கு பிறகு பவதாரணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் பவதாரணி உடல் அங்கிருந்து இன்று மாலை சென்னை கொண்டு வரப்பட்டது.
இதையும் படிக்க.. அம்மாவின் வாசனை.. வெளிவராத பவதாரணியின் பாடலை வெளியிட்ட கனிமொழி
சென்னை விமான நிலையத்திலிருந்து பவதாரணி உடல் தி.நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு உறவினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்படும்.
பிறகு, இன்றிரவு சொந்த ஊரான தேனிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று இளையராஜாவின் குடும்ப உறவினர்கள் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.