சென்னை: திரைப்பட இசையமைப்பாளா் இளையராஜாவின் மகளும், பின்னணிப் பாடகியுமான பவதாரணி (47) உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானாா்.
நமக்கு மிகவும் பிடித்த பல பாடல்களைப் பாடிய அந்தக் குரல் நேற்று ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில், பவதாரணி குரலில் பதிவு செய்யப்பட்டு, இதுவரை வெளிவராத பாடல் ஒன்றை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, 'அம்மாவின் வாசனை’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையை, இசைஞானி இளையராஜா அவர்கள் பாடலாக இசையமைத்தார்கள். பவதாரணி அவர்களின் அழகான குரலில் அப்பாடல் பதிவு செய்யப்பட்டது. அவர் பாடிய பிறகு அந்த கவிதை முழுமை பெற்றது. இதுவரை வெளியிடப்படாத அந்தப் பாடலை, அவர் நினைவாக இங்குப் பகிர்கிறேன் என்று பாடலையும் இணைத்துள்ளார்.
'à®à®®à¯à®®à®¾à®µà®¿à®©à¯ வாà®à®©à¯â à®à®©à¯à®± தலà¯à®ªà¯à®ªà®¿à®²à¯ நான௠à®à®´à¯à®¤à®¿à®¯ à®à®µà®¿à®¤à¯à®¯à¯, à®à®à¯à®à®¾à®©à®¿ à®à®³à¯à®¯à®°à®¾à®à®¾ à®à®µà®°à¯à®à®³à¯ பாà®à®²à®¾à® à®à®à¯à®¯à®®à¯à®¤à¯à®¤à®¾à®°à¯à®à®³à¯. பவதாரணி à®à®µà®°à¯à®à®³à®¿à®©à¯ à®à®´à®à®¾à®© à®à¯à®°à®²à®¿à®²à¯ à®à®ªà¯à®ªà®¾à®à®²à¯ பதிவ௠à®à¯à®¯à¯à®¯à®ªà¯à®ªà®à¯à®à®¤à¯. à®à®µà®°à¯ பாà®à®¿à®¯ பிறà®à¯ à®à®¨à¯à®¤ à®à®µà®¿à®¤à¯ à®®à¯à®´à¯à®®à¯ பà¯à®±à¯à®±à®¤à¯. à®à®¤à¯à®µà®°à¯ வà¯à®³à®¿à®¯à®¿à®à®ªà¯à®ªà®à®¾à®¤ à®à®¨à¯à®¤à®ªà¯ பாà®à®²à¯, à®à®µà®°à¯ நினà¯à®µà®¾à® à®à®à¯à®à¯à®ªà¯ பà®à®¿à®°à¯à®à®¿à®±à¯à®©à¯. pic.twitter.com/CqrLNdrfkv
â Kanimozhi (à®à®©à®¿à®®à¯à®´à®¿) (@KanimozhiDMK) January 26, 2024
முன்னதாக, மறைவு செய்தி கேட்டதும், கனிமொழி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், இசைக் கலைஞர் பவதாரணி அவர்கள் மறைவெய்திய செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பின்னணி பாடகராக தனித்துவமிக்க பாடல்களைத் தந்த அவரது மறைவு தமிழ் திரைத்துறைக்குப் பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டிருந்தார்.
புற்றுநோய் பாதித்து இலங்கையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று காலமானார். அவரது உடல் வைத்தியசாலையிலிருந்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. முழுவதும் மூடப்பட்ட பெட்டியில் பவதாரணி உடல் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வுக்கு பிறகு பவதாரணி உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. பின்னர் பவதாரணி உடல் அங்கிருந்து இன்று மாலை சென்னை கொண்டு வரப்படுகிறது.
பவதாரணி உடல்நலப் பாதிப்புக்காக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக இலங்கையில் ஆயுா்வேத மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் பிறந்த பவதாரணி தொடக்கம்முதலே, தந்தை இளையராஜா, சகோதரா்கள் காா்த்திக்ராஜா, யுவன் ஷங்கா் ராஜா ஆகியோரின் இசைப் பணிகளில் இணைந்து பயணித்து வந்தாா். இளையராஜா இசையமைத்த ‘ராசய்யா’ திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக பவதாரணி அறிமுகமானாா். இவா் பாடிய ‘மஸ்தானா மஸ்தானா’ என்ற பாடல் பெரிய வரவேற்பை பெறவே, தொடா்ந்து தனது தந்தை, சகோதரா்கள் இசையமைப்பிலும், தேவா, சிற்பி உள்ளிட்டோரின் இசையமைப்பிலும் பாடினாா். நடிகை ரேவதி இயக்கிய ’மித்ர் மை பிரண்ட்’ என்ற படம் மூலம் இசையமைப்பாளராக பவதாரணி அறிமுகமானாா்.
இவரது குரலின் தனித்தன்மையே, பவதாரணியை தனியாக அடையாளப்படுத்தி காட்டிவிடும். ‘அழகி’ திரைப்படத்தில் இவா் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா....’ என்ற பாடல் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தொடா்ந்து, இவா் பாடிய பல பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இளையராஜா இசையில் ‘பாரதி’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு...’ பாடலுக்காக பவதாரணிக்கு தேசிய விருது கிடைத்தது. ஹிந்தி படத்துக்கும் இசை அமைத்துள்ளாா். தமிழில் ‘இலக்கணம்’, ‘அமிா்தம்’, ‘வெள்ளச்சி’ போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறாா்.
இவா் சபரிராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டாா். வரும் சனிக்கிழமை இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இளையராஜாவும் இலங்கையில்தான் இருக்கிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






