திருச்சியில் குடியரசு நாள்  கொண்டாட்டம்!

திருச்சி மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர் பிரதீப் குமார்.
தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர் பிரதீப் குமார்.

திருச்சி: நாடு முழுவதும் 75 ஆவது குடியரசு நாள் விழா கோலாகலமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

மாநகரக் காவல்துறை ஆணையர் என். காமினி, மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன், மத்திய மண்டல டிஐஜி மனோகர், மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்  வருண்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆட்சியருக்கு மரியாதை அளித்தனர். தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார். பின்னர் மூவர்ண பலூன்கள் மற்றும் ஒரு ஜோடி வெண்புறாக்களை பறக்க விட்டார். 

காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட ஆட்சியர்

தொடர்ச்சியாக வீரர்கள், காவல் துறையினர், பாதுகாப்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது.

பின்பு சீருடை பணியாளர்கள், சமூக பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 432 பேருக்கு விருதுகளும், பதக்கங்களும், காசோலையும் வழங்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்கள். மேலும் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 104 காவலர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

மேலும், இந்த குடியரசு தின விழாவில் அரசு சார்பில் 33.38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து குடியரசு நாள் விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளி,கல்லூரி மாணவிகளின் நடனங்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன 

முதல்முறையாக இந்த ஆண்டு பெண்கள் சிறப்பு காவல் படை அமைக்கப்பட்டு அவர்களும் இந்த குடியரசு  நாள் விழா அணிவகுப்பில் பங்கேற்றது கூடுதல் சிறப்பாக அமைந்தது.  

இதேபோல, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி கே. பாபு, மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மு. அன்பழகன், திருச்சி ரயில்வே கோட்ட அலுவலகத்தில் கோட்ட மேலாளர் எம். எஸ். அன்பழகன்  ஆகியோர்  தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர். கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com