விழுப்புரத்தில் குடியரசு நாள்  கொண்டாட்டம்!

நாடு முழுவதும் 75 ஆவது குடியரசு நாள் விழா கோலாகலமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.
விழுப்புரத்தில் குடியரசு நாள்  கொண்டாட்டம்!

விழுப்புரம்: நாடு முழுவதும் 75 ஆவது குடியரசு நாள் விழா கோலாகலமாக வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்தார்.

விழுப்புரம் ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக மைதானத்தில் 75 -ஆவது குடியரசு நாள்  வெள்ளிக்கிழமை கோலகலமாகக்  கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சி.பழனி தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்களையும் ஆட்சியர் பறக்க விட்டார்.

இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி தீபக் சிவாச்சுடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் பார்வையிட்டார்.

பின்னர், காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல்படை, தீயணைப்புத் துறை, தேசிய மாணவர் படை, நாட்டுநலப்பணித் திட்ட மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் சி.பழனி ஏற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர்,அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 78 போலீஸாருக்கு முதல்வரின் பதக்கம் வழங்கிய ஆட்சியர், 41 பயனாளிகளுக்கு ரூ.35.05 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர், பல்துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியர், செய்தியாளர்களுக்கும் பணி பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் எம்.பி. துரை. ரவிக்குமார் எம்எல்ஏக்கள்  விழுப்புரம் இரா. லட்சுமணன், மயிலம் ச.சிவக்குமார், விழுப்புரம் சரக டிஐஜி திஷா மிட்டல், எஸ்.பி. தீபக் சிவாச் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேசுவரி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ அறிவழகன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com