எங்கள் பூரணம் அம்மா: அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!

அமைச்சர் அன்பில் மகேஷ் அரசுப் பள்ளிக்கு நன்கொடையாக கொடுத்த ஆயி பூரணம் அம்மாளுக்கு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 
எங்கள் பூரணம் அம்மா: அமைச்சர் அன்பில் மகேஷ் நெகிழ்ச்சி!

மதுரை மாவட்டம், யா. ஒத்தக்கடை அருகேயுள்ள கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் ஆயி என்ற பூரணம். வங்கி ஊழியரான இவா், கொடிக்குளம் அரசுப் பள்ளி விரிவாக்கத்துக்காக தனக்குச் சொந்தமான ரூ.7 கோடி மதிப்பிலான 1.50 ஏக்கா் நிலத்தை தானமாக வழங்கினாா்.

ஆயி பூரணம் அம்மாளுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர். 

இன்று சென்னையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் முதலமைச்சரின் ஆயி பூரணம் அம்மாளுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. 

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில், “கல்வி எனும் அறத்தின் வழியே ஒன்றிணைந்தோம். கல்வி எனும் ஆயுதம் ஏந்தி செயலாற்றுவோம்! எங்கள் பூரணம் அம்மா” எனப் பதிவிட்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். 

இணையத்தில் இந்த புகைப்படங்களும் எங்கள் பூரணம் அம்மா என்ற ஹேஷ்டேக்கும்  வைரலாகிவருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com