
கோவளம் முதல் மாமல்லபுரம் வரை சைக்கிளிங் போட்டி நடைபெற உள்ளதால் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.27,28) போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் 2024 தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான சைக்கிளிங் போட்டியானது கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான பகுதியில் நாளை சனிக்கிழமை (ஜன.27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜன.28) நடைபெற உள்ளது.
இதையும் படிக்க | ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தியும்.. புலம்பும் பயணிகள்
இதையடுத்து கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் முதல் மாமல்லபுரம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் பயணத்திற்கு பூஞ்சேரி, திருப்போரூர், கேளம்பாக்கம்(ஒஎம்ஆர்) வழியாக பயன்படுத்திக் கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.