ஐஸ்லாந்தாக மாறுகிறது உதகை!

வட இந்தியா கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரில் நடுங்கும்போது, தமிழகத்தின் தெற்கில் உள்ள உதகை ஐஸ்லாந்தாக மாறுகிறது.
உதகையில் சாலையோரங்களில் தீ மூட்டி குளிா்காய்ந்து வரும் பொதுமக்கள்.
உதகையில் சாலையோரங்களில் தீ மூட்டி குளிா்காய்ந்து வரும் பொதுமக்கள்.
Published on
Updated on
1 min read

நீலகிரி: வட இந்தியா கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் குளிரில் நடுங்கும்போது, தமிழகத்தின் தெற்கில் உள்ள உதகை ஐஸ்லாந்தாக மாறிவருகிறது. வெப்பநிலை 2.5 டிகிரி செல்சியஸ் குறைந்து, ஈரப்பதம் 65 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. நீா்நிலைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் நீா்ப் பனியானது ஆவியாகி கடும் பனி மூட்டமாக காட்சியளித்தது.

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனி நிலவுகிறது. ஆனால், இந்த ஆண்டு, புயல் மழையால், பனிப்பொழிவு ஜனவரியில் தாமதமாக துவங்கியது. உதகை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள காந்தல், தலை குந்தா போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் தென்படுகிறது. 

கடந்த ஒருவார காலமாக குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த உறைபனியின் கடும் குளிரால் பலர் காலை நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பொதுமக்கள் பலா் சாலையோரங்களில் தீ மூட்டி குளிா்காய்ந்து வருகின்றனா்.

வெள்ளை கம்பளம் விரிக்கப்பட்டது போல பச்சை புல்வெளிகளில், வாகனங்களில் பனி படலம் காணப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள புல்வெளிகளின் பெரிய திட்டுகள் ஒரு அதிசய நிலத்தை ஒத்ததாகவும், பெரும்பாலும் வெள்ளை உறைபனி என்று அழைக்கப்படும், புதிய பனித்துளிகள் பச்சை புல் வெளிகள்மீதும் காணப்படுகிறது.

உதகை நகர், தளிகுண்டா, ஹெச்பிஎஃப், காந்தல் மற்றும் ஃபிங்கர்போஸ்ட் உள்ளிட்ட ஊட்டியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளை உறைபனி காணப்பட்டது.

வீடுகளில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் ஒரு அங்குலம் வரை பனிக்கட்டிகள் காணப்பட்டன.

உள்ளூர் வானிலை அதிகாரிகள் கூறுகையில், சமீபத்திய வாரங்களில் பகல் மற்றும் இரவு வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாறுபாடு உள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் என்ற நிலையிலேயே பதிவாகி வருகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

உதகையில் கடும் பனிப்பொழிவு காணப்படுவதால் கால்நடைகளுக்கான தீவனத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com