ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

முதல்வர் ஸ்டாலினுடன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்!

தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலினுடன் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

News image

முதல்வர் ஸ்டாலினுடன் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்

Updated On :29 ஜனவரி 2024, 7:07 am

DIN

தமிழ்நாடு முதல்வர் மு.கஸ்டாலினுடன் டென்னிஸ் ஜாம்பவான் நோவக் ஜோகோவிச் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அரசுமுறை பயணமாக ஸ்பெயின் நாட்டுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை இரவு புறப்பட்டுச் சென்றார். அந்த நாட்டில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில், தமிழ்நாடு அரசின் சாா்பில் முதலீட்டாளா் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் பயணித்த அதே விமானத்தில் டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சும் பயணித்துள்ளார். அப்போது இருவரும் சந்தித்து கொண்டனர்.

இந்த நிலையில், இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், ‘ஆகாயத்தில் ஆச்சரியம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Story image

முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்த புகைப்படம், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.