ஜாக்டோ - ஜியோ சார்பில் சாலை மறியல் போராட்டம்: 100-க்கும் மேற்பட்டோர் கைது!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் இரண்டாம் கட்டமாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியாளர் முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோவினர்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ ஜியோவினர்.

திருவள்ளூர்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 10  அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் இரண்டாம் கட்டமாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியாளர் முன்பு செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவற்றக்கோரி  2-ஆவது  கட்டமாக மாவட்ட தலைநகரங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் க. திவ்யா, பா. ராஜாஜி செ. வேல்முருகன், மா.லோகைய்யா, அ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில துணைத்தலைவர் அ.மணிகண்டன் வரவேற்புரை வழங்கினார்.

இதில் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் ரா.தாஸ் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது அனைத்துத்துறை பணியாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், அரசு துறைகளில் காலியாக உள்ள காலியிடங்களை நிரப்புதல், புதிர் ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து  ஜாக்டோ - ஜியோவினர் 100-க்கும் மேற்பட்டோர் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com