மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை: சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. 

மருத்துவமனைக்குள் மருத்துவக் கல்லூரி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விடுதி, பணியாளர்களுக்கான குடியிருப்புகள் ஆகியவை அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட தமிழக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2018 ஆம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 இல் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை 224.24 ஏக்கர் பரப்பளவில் சுமார் 750 படுக்கைகளுடன் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com