செந்தில் பாலாஜியின் காவல்18-ஆவது முறையாக நீட்டிப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-ஆவது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பிப்.7 வரை நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் பிப்.7 வரை நீட்டிப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 18-ஆவது முறையாக நீட்டித்து சென்னை கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை பிப். 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் புதன்கிழமையுடன் முடிவடைந்தது. சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி புதன்கிழமை விடுமுறை என்பதால் சென்னை மாவட்ட 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி டி.வி. ஆனந்த் வழக்கை விசாரித்தாா். அப்போது, அவா் முன் புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப். 7-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன் மூலம் 18-ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com