சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா? - கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா?, காங்கிரஸ் கட்சிக்கும் பெற்றும் தாருங்கள் என்று என்னிடமே நிர்வாகிகள் கேட்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி
Published on
Updated on
1 min read


சென்னை: சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா?, காங்கிரஸ் கட்சிக்கும் பெற்றும் தாருங்கள் என்று என்னிடமே நிர்வாகிகள் கேட்கிறார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

சென்னையில் அவர் செய்தியாளர்களிடம்  பேசியதாவது: 
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது வரவேற்கத்தக்கது. ஆனால் பாஜக கூட்டணயில் இருந்து விலகியதிற்கான காரணத்தை அதிமுக இதுவரை மக்களிடம் தெரிவிக்கவில்லை. எனவே, அதிமுகவினர் நம்பத் தகுந்தவர்களாக இல்லை. பாஜக ஒரு மதவாத கட்சி. காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி. 

மேலும், சென்னையில் திமுக மட்டும்தான் போட்டியிட வேண்டுமா?, காங்கிரஸ் கட்சிக்கும் பெற்றும் தாருங்கள் என்று என்னிடமே நிர்வாகிகள் பலர் கேட்கிறார்கள். உங்களுக்காக நான் கேட்கிறேன் என்று சொல்லி இருக்கிறேன். கூட்டணியில் இது வழக்கமாக பேசப்படுவதுதான். 

ஒரு தொகுதியில் ஒரே கட்சி தொடர்ந்து போட்டியிட்டால் மற்றொரு கட்சிக்கு வாய்ப்பு இருக்காது. அப்போது அந்த கட்சி தொண்டர்கள் நாங்கள் என்ன இவர்களுக்கு வேலை செய்து கொண்டே இருப்பதுதான் நமது வேலையா? என்று கேட்பார்கள். இது தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிக்கும் பொருத்தும். காங்கிரஸ் கட்சியிலும் இது போல கேட்பார்கள்.ஆட்சி அதிகாரம் மாறி மாறி வருவதில் தவறில்லை என்று நமது அரசியலமைப்பு சொல்கிறது.

அதிகாரம் என்பது தொடர்ந்து இருக்கவும் கூடாது. ஒருவரே ஆட்சி செய்வது சர்வாதிகார ஆட்சியாக மாறிவிடும். எனவே நாட்டில் ஆட்சி மாற்றங்கள் தேவை. அதிகாரத்தில் இல்லை என்று ஒருபோதும் காங்கிரஸ் கவலைப்பட்டது கிடையாது.

மேலும், காங்கிரஸ் குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பனை அவர் சாந்த கட்சியின் தலைமை தான் கண்டிக்க வேண்டும்.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com