கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

10 சிறப்பு ரயில்கள் சேவை நீடிப்பு

ராமநாதபுரம்-செகந்திராபாத் , மதுரை - காச்சிகுடா உள்ளிட்ட 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :1 ஜூலை 2024, 10:21 pm

Din

ராமநாதபுரம்-செகந்திராபாத் , மதுரை - காச்சிகுடா உள்ளிட்ட 10 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாதிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரயில் (எண்: 07695) புதன்கிழமை (ஜூலை 3) முதல் ஜூலை 17-ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக ராமநாதபுரத்திலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 9.50 செகந்திராபாத் செல்லும் ரயில் (எண்: 07696) ஜூலை 5 முதல் ஜூலை 17-ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், மகாராஷ்டிர மாநிலம் ஹஸூா் சாஹிப் நாந்தேட்- ஈரோடு இடையே இயங்கும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07189/07190) ஜூலை 5 முதல் செப்.29 வரையும், நாரசாபூா் - பெங்களூரு இடையே இயங்கும் வாராந்திர ரயில் (எண்: 07153/07154) ஜூலை 5 முதல் ஆக.10 வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

காச்சிகுடா ரயில்கள்: அதேபோல், காச்சிகுடாவிலிருந்து வாரந்தோறும் திங்கள்கிழமை மதுரை செல்லும் சிறப்பு ரயிலும் (எண்: 07191), மறுமாா்க்கமாக மதுரையிலிருந்து வாரந்தோறும் புதன்கிழமை காச்சிகுடா செல்லும் ரயிலும் (எண்: 07192) ஜூலை 3 முதல் அக்.2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், காச்சிகுடாவிலிருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நாகா்கோவில் செல்லும் ரயிலும் (எண்: 07435), மறுமாா்க்கமாக நாகா்கோவிலிருந்து வாந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காச்சிகுடா செல்லும் ரயிலும் (எண்: 07436) ஜூலை 5 முதல் செப்.29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.