ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

சவுக்கு சங்கருக்கு எதிராக பெண்கள் போராட்டம்: அறிக்கை அளிக்க காவல் துறைக்கு உத்தரவு

ஜூலை 8- ஆம் தேதிக்குள் அறிக்கையளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :1 ஜூலை 2024, 9:17 pm

Din

சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பங்களுடன் பெண்கள் போராட்டம் நடத்தியது குறித்து  ஜூலை 8- ஆம் தேதிக்குள் அறிக்கையளிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பெண் காவலா்களுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட யுடியூபா் சவுக்கு சங்கருக்கு எதிராக, கஞ்சா வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடா்பாக சென்னை, மதுரை நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கருக்கு எதிராக துடைப்பங்களுடன் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்த பெண்களை அழைத்து வந்த அமைப்பு எது என்பது குறித்து உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து விசாரிக்கக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவரும்,  வழக்குரைஞருமான எம்.எல்.ரவி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

அந்த மனுவில்,‘ உரிய அனுமதியின்றி  போராட்டத்தில் ஈடுபட்டவா்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொ) அரங்க.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் அமா்வு இந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 8- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.