ஜியோ, ஏர்டெல்லுக்கு அதிர்ச்சி வைத்தியம்! கட்டணத்தைக் குறைத்தது பிஎஸ்என்எல்!!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திய அதேவேளையில் கட்டணத்தைக் குறைத்துள்ளது பிஎஸ்என்எல்.
பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல்
Published on
Updated on
2 min read

தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக சேவைக் கட்டணத்தை உயர்த்தி வரும் நிலையில், அவற்றுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் கட்டணத்தைக் குறைத்து, மிகச் சிறந்த பிளான்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

பயன்பாட்டுக் காலத்தை அதிகரித்தல், அளவில்லா அழைப்பு, டேட்டா பயன்பாடு என பயனாளிகளைக் கவரும் வகையில் பல பிளான்களை அறிமுகப்படுத்தி ஏட்டிக்குப் போட்டியாக மாறியிருக்கிறது பிஎஸ்என்எல்.

ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை 26 சதவீதம் உயர்த்தியிருக்கின்றன. அவை ஜூலை 4ஆம் தேதி முதல் நடைமுறைக்கும் வரவிருக்கிறது. இதனால், மாதச் செலவில் சில நூறுகள் அதிகம் பிடிக்குமே என்றும், ஒரு வீட்டில் நான்கு பேர் இருந்தால் நான்கு நூறுகள் அதிகம் செலவாகி, பட்ஜெட்டில் பெரிய பெட்ஷீட் விழுமே என்று கலங்கி நிற்கும் நிலையில்தான், நான் இருக்கிறேன் என்று சொல்வது போல பிஎஸ்என்எல், மிகச் சிறப்பான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதாவது பலரும் தங்களது தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை மாற்றலாமா என்று யோசித்து வந்த வேளையில்தான், பிஎஸ்என்எல், இந்த விலைக் குறைப்பு திட்டத்தை அறிவித்துளள்து. அதாவது, ரூ.249க்கு மிகச் சிறப்பான பிளான் ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், ரூ.249க்கு ரீசார்ஜ் செய்தால், 45 நாள்கள் (28 நாள்கள் அல்ல) பயன்பாட்டுக் காலம், நாள் ஒன்றுக்கு 2 ஜிபி (மொத்தமாக 90 ஜிபி), அளவற்ற அழைப்பு, நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசம் என்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இதன் மூலம், கட்டண உயர்வால் அவதிப்படுவோர் உடனடியாக பிஎஸ்என்எல்-க்கு மாறுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.

பிஎஸ்என்எல் திட்டத்துடன் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் கட்டணத்தையும் மக்கள் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதாவது, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களின் விலை ஏற்றம் ஜூலை 3ஆம் தேதி முதலும் வோடஃபோன் விலை ஏற்றம் ஜூலை 4ஆம் தேதி முதலும் நடைமுறைக்கு வருகின்றன.

அதாவது, ஜியோ வெளியிட்டிருக்கும் சேவைக் கட்டண உயர்வு தொடர்பான அறிக்கையில், ஜியோ செல்போன் சேவைக் கட்டணம் 12% முதல் 25 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.155 ஆக இருந்த மாதக் கட்டணம் ரூ.189 ஆகவும், ரூ.399 ஆக இருந்த கட்டணம் ரூ.449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் 28 நாள்களுக்கு அளவில்லா அழைப்பு மற்றும் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி திட்டம் ரூ.299-லிருந்து ரூ.349 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல்
ஜியோ, ஏர்டெலை தொடர்ந்து கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன்!

ஏர்டெல் நிறுவனத்தின் இதே ரூ.249க்கு என்னவெல்லாம் கிடைக்கும்?

28 நாள்களுக்கு பயன்பாட்டுக் காலம். (பிஎஸ்என்எல் 45 நாள்கள்)

நாள் ஒன்றுக்கு 1ஜிபி தான் கிடைக்கும். (பிஎஸ்என்எல் 2 ஜிபி) ஒரு மாதம் என்றால் குறைந்தபட்சம் 30 நாள்களுக்குப் பயன்பாட்டுக் காலத்தைக் கூட கொடுக்க மனம் வராத தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே கூடுதலாக 17 நாள்கள் பயன்பாட்டுக் காலமாக பிஎஸ்என்எல் வழங்குகிறது.

தொலைத்தொடர்புத் துறையில் பயனர்களுக்கு எளிதான சேவையை வழங்க பிஎஸ்என்எல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்றாகவே இந்த அறிவிப்பும் இடம்பெற்றுள்ளது.

மாத திட்டத்தின் கட்டணத்தை உயர்த்திய ஜியோ, விலை உயர்வு நடைமுறைக்குள் வருவதற்குள் பழைய கட்டணத்தின்படி, யாரும் பயன்பெற்று விடக்கூடாது என்பதற்காக, பயனாளர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்ட திட்டங்களை தற்காலிகமாக நீக்கியுள்ளது ரிலையன்ஸ் ஜியோ.

ஜூலை 3ஆம் தேதி முதல் ஜியோ நெட்வொர்க் தன்னுடைய சேவைக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அதாவது, அடிப்படை சந்தாவான ரூ.155 திட்டம் 22% விலை உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.189-ஆக உயர்கிறது.

விலை ஏற்றம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் நிலையில், அதிக பயனாளர்களால் பயன்படுத்தப்பட்ட ரூ.395 மற்றும் ரூ.1559 ஆகிய இரண்டு சந்தாக்களையும் ஜியோ நிறுவனம் நீக்கியிருக்கிறது. இது விலை உயர்வு நடைமுறைக்கு வரும் வரை தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கலாம் என்றே தெரிகிறது.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை உயர்த்திய நிலையில், வோடஃபோன், ஐடியா நிறுவனமும் விலை உயர்வை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

பிஎஸ்என்எல்
கட்டணங்களை உயர்த்தியது ஜியோ!

பீரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டண உயர்வு 10% முதல் 23% வரை இருக்கும், கட்டண உயர்வானது ஜூலை 4 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. அதன்படி, 28 நாள்களுக்கு ரூ.299 கட்டணம் ரூ. 349 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு தினம் 1.5 ஜிபி, அளவில்லா அழைப்பு மட்டுமே கிடைக்கும்.

365 நாள்களுக்கு ரூ.2,899 என்ற ஆண்டுக் கட்டணம் ரூ.3,449 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் அளவில்லா அழைப்பு மற்றும் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்த நிலையில், பிஎஸ்என்எல், அனைத்துக்கும் அதிர்ச்சி வைத்தியமாக விலைக் குறைப்பை அறிவித்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com