ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

கட்டணங்களை உயர்த்தியது ஜியோ!

ஜியோ நிறுவனம் புதிய 5ஜி திட்டங்களில் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.

News image
Updated On :27 ஜூன் 2024, 6:58 pm IST

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக, தனது 5ஜி மொபைல்களுக்கான புதிய திட்டங்களில், கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில், “செல்போன் கட்டணம் 12% முதல் 25 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 155 ஆக இருந்த மாதக் கட்டணம் ரூ. 189 ஆகவும், ரூ 399 ஆக இருந்த கட்டணம் ரூ. 449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 நாள்களுக்கான 2ஜிபி திட்டம் ரூ.299-லிருந்து ரூ.349 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற ஜூலை 3 ஆம் தேதியில் முதல் அமலாகும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத் தலைவர் ஆகாஷ் எம்.அம்பானி கூறுகையில், “புதிய திட்டங்களின் அறிமுகமானது, 5ஜி மற்றும் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் செய்யும் முதலீடுகள் மூலம் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும். இது எங்கும் நிறைந்த, உயர்தர, மலிவான இணையதளமாகும். டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பான ஜியோ, இதற்கு பங்களிப்பதில் பெருமிதம் கொள்கிறது. ஜியோ எப்போதும் நம் நாட்டிலும், வாடிக்கையாளரிடத்திலும் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்தியாவுக்காக தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.