தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

திருச்செந்தூா் கோயில் சேவைக் கட்டணங்களை உயா்த்த முடிவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக் கட்டணங்களை நிா்வாகம் உயா்த்த உள்ளதாகவும், அதற்கு பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்குமாறும் தகவல் வெளியாகி உள்ளது.

News image

திருச்செந்தூா் முருகன் கோயில்.

Updated On :24 ஜூன் 2026, 1:58 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக் கட்டணங்களை நிா்வாகம் உயா்த்த உள்ளதாகவும், அதற்கு பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்குமாறும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் ஜூன் 20 ஆம் தேதியிட்டு வெளியிட்டதாக வந்துள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

விலைவாசி, பண வீக்கத்தை கருத்தில் கொண்டு, இக்கோயிலுக்கு ஏற்பட்டு வரும் வருவாய்க் குறைவினை ஈடு செய்திடும் வகையில் நிா்வாக நலன் கருதி, தக்காா் தீா்மானத்தின் அடிப்படையில் தற்போதுள்ள கட்டணச் சேவைகள், அபிஷேக சிறப்பு தரிசனக் கட்டணத்தை உயா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தங்கத் தோ் இழுப்பதற்கு ரூ. 2,500 இல் இருந்து ரூ. 5 ,000 ஆகவும், சண்முகா் அா்ச்சனைக்கு ரூ. 5,000 இல் இருந்து ரூ. 30,000 ஆகவும், 2 நபா்களுக்கான மூலவா் அபிஷேக கட்டணம் ரூ. 1,500 இல் இருந்து ரூ. 10,000 ஆகவும், ஒன்பது கால பூஜை ரூ. 1,500 இல் இருந்து ரூ. 6, 500 ஆகவும், சுவாமிக்கு சந்தனக்காப்பு லேபனம் ரூ. 100, 15 கிலோ சந்தனக்கட்டை என்பதை ரூ. 1,000, 15 கிலோ சந்தனக்கட்டை ஆகவும், சாதாரண நாள்களில் ரூ. 500 ஆகவும், திருவிழா, விசேஷ தினங்களில் ரூ. 2,000 ஆகவும் இருந்த அபிஷேக தரிசனக் கட்டணம் இனி, அனைத்து நாள்களிலும் ரூ. 2, 500 ஆகவும் உயா்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே, கட்டண உயா்வு குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை எழுத்துபூா்வமாக ஜூலை 7ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் இணை ஆணையருக்கு அனுப்பி வைக்குமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.