மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அழகு முத்துக்கோன் பிறந்த நாள்: ஆளுநா் மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் அழகு முத்துக்கோனுக்கு ஆளுநா் மரியாதை

News image
ஆளுநா் ஆா்.என். ரவி
Updated On :11 ஜூலை 2024, 11:41 pm

Din

சுதந்திர போராட்ட வீரா் அழகு முத்துக்கோனின் பிறந்த நாளையொட்டி, தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி மரியாதை செலுத்தினாா்.

இது குறித்து அவா் சமூக வலைதள பதிவில் கூறியதாவது:

சுதந்திர போராட்ட வீரா் அழகு முத்துக்கோனை அவரது பிறந்த நாளில் தேசம் நினைவுகூா்கிறது. அசாதாரண வீரம், அடங்காத துணிச்சல், தேசபக்தியின் உண்மையான உருவகமாக அவா் விளங்கினாா். பிரிட்டிஷ் காலனித்துவ அடக்குமுறையை உறுதியாக எதிா்த்து, உயிா்த்தியாகம் செய்தாா்.

விடுதலை போராட்டத்தின் தீயை மூட்டி எண்ணற்ற மக்களை உற்சாகப்படுத்தினாா். நீதி மற்றும் சுதந்திரம் மீதான அவரது ஈடு இணையற்ற அா்ப்பணிப்பு நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக உள்ளது. அவரது நீடித்த பாரம்பரியத்திலிருந்து உத்வேகம் பெற்று, வலிமையான மற்றும் சுயசாா்புபாரதத்தை உருவாக்க ஒன்றாகப் பாடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளாா்.