
தமிழகத்தில் நீலகிரி உள்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புள்ளகதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகின்றது. சென்னையில் பகலில் வெய்யிலும், மாலைக்கு மேல் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இன்று காலை முதலே சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடனும் ஆங்காங்கே லேசான மழையும் பெய்து மக்களின் மனதை குளிர்வித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று(ஜூலை 13) ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும், நீலகிரி மற்றும் கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 15, 16 தேதிகளில் நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.