
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலின் வாழ்க்கையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு விளையாடுவதாக மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.
கடந்த 90 நாள்களுக்கும் மேலாக, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இருப்பினும், அமலாக்கத் துறை கைதுக்கு எதிரான மனு மீது, உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கினாலும், கலால் கொள்கை முறைகேடு வழக்கில், சிபிஐ, கடந்த ஜூன் 26ஆம் தேதி அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அரவிந்த கேஜரிவால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களுடனான சந்திப்பில் சஞ்சய் சிங் கூறுகையில்,
கேஜரிவால் சிறையிலிருந்து விரைவில் வெளியே கொண்டுவந்து மருத்துவ உதவி வழங்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு மோசமான சம்பவம் நடக்கலாம் என்றார்.
கலால் கொள்கை வழக்கில் கேஜரிவால் கைது செய்யும்போது அவரது எடை 70 கிலோவாக இருந்தது. தற்போது அவரது எடை 61.5 கிலோவாகக் குறைந்துள்ளது. அதற்குக் காரணம் சோதனைகள் எதுவும் சரிவர செய்யப்படாதுதான். இந்த எடை இழப்பு சில தீவிர நோய்களின் அறிகுறியாகும்.
கேஜரிவாலின் குடும்பம், ஆம் ஆத்மி கட்சி, அவரது நலம் விரும்பிகள் சிறையில் உள்ள அவரது உடல்நிலை குறித்துக் கவலையடைந்துள்ளனர்.
மத்தியில் ஆளும் பாஜகவின் நோக்கம், அவரை சிறையில் அடைத்து அவரது உயிருடன் விளையாடுவதுதான். அவர் கடுமையான உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்வதற்காக சதி செய்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.