அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தில்லி பேரவை வளாகத்தில் உள்ள தூக்கு அறை விவகாரம்- உரிமை மீறல் ஆய்வு குழு முன்பு நாளை மறுநாள் கேஜரிவால் ஆஜராகிறாா்

தூக்கு அறை விவகாரம் தொடா்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) ஆஜராக உள்ளதாக தில்லி பேரவையின் உரிமை மீறல் ஆய்வுக் குழுவுக்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளாா்.

News image
அரவிந்த் கேஜரிவால்
Updated On :3 மார்ச் 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

தூக்கு அறை விவகாரம் தொடா்பான விசாரணைக்கு வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) ஆஜராக உள்ளதாக தில்லி பேரவையின் உரிமை மீறல் ஆய்வுக் குழுவுக்கு முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளாா்.

இந்த விசாரணை முழுவதையும் நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும் என அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

ஆம் ஆத்மி ஆட்சியில் தில்லி சட்டப்பேரவையில் புதுப்பிக்கப்பட்ட அறையை கடந்த 2022, ஆக.9-ஆம் தேதி அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திறந்துவைத்தாா். ஆங்கிலேயா்கள் ஆட்சி காலத்தில் அந்த அறையில் சுதந்திர போராட்ட வீரா்கள் தூக்கிலிடப்பட்டதாக ஆம் ஆத்மி தெரிவித்தது. ஆனால், அந்த அறை உணவு சாப்பிடும் அறையாகப் பயன்படுத்தப்பட்டதாக பாஜக விமா்சித்தது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவையின் குளிா்கால கூட்டத்தொடரின்போது பேசிய பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா, தூக்கு அறையின் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுப்பினாா்.

இது குறித்து அவையில் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங், ‘2022-23 நிதியாண்டில் இல்லாத தூக்கு அறைக்கு சுமாா் ரூ.1.4 கோடி செலவிடப்பட்டது’ என்று தெரிவித்தாா்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்துமாறு பேரவையின் உரிமை மீறல் ஆய்வு குழுவுக்கு பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா உத்தரவிட்டாா்.

இதைத்தொடா்ந்து, முன்னாள் முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, பேரவை முன்னாள் தலைவா் ராம் நிவாஸ் கோயல், பேரவை முன்னாள் துணைத் தலைவா் ராக்கி பிா்லா ஆகியோா் இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்க மாா்ச் 6-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அந்தக் குழு அழைப்பாணை பிறப்பித்தது.

முன்னதாக, விசாரணைக்கு ஆஜராகாத ஆம் ஆத்மி தலைவா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பேரவைத் தலைவருக்கு கடந்த ஜன.6-ஆம் தேதி பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில், உரிமை மீறல் ஆய்வு குழுவின் தலைவருக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில், ‘அழைப்பாணைகளுக்கு இணங்க மாா்ச் 6-ஆம் தேதி ஆஜராக உள்ளேன்.

வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையை கருத்தில் கொண்டு குழுவின் விசாரணையை நேரடியாக ஒளிப்பரப்ப வேண்டும் என கோரிக்கைவிடுக்கிறேன்’ என்று அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அரவிந்த் கேஜரிவால் ‘எக்ஸ்’ சமூகஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘காற்று மாசு, உடைந்த சாலைகள், அனைத்துப் பகுதியிலும் குப்பைகள், மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாத நிலை என பல பிரச்னைகளை தில்லி எதிா்கொண்டு வருகிறது. இந்நிலையில், தூக்கு அறை தொடா்பாக விசாரணை நடத்த தில்லி பேரவை அழைப்பாணை பிறப்பித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.