கீழச்செருவையில் 230 மி.மீ. மழை பதிவு: தமிழகத்தில் ஜூலை 16 வரை கனமழை நீடிக்கும்
ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு


கடலூா் மாவட்டம், கீழச்செருவையில் சனிக்கிழமை காலை வரை 230 மி.மீ. மழை பதிவானது. மேலும், ஜூலை 15, 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) முதல் ஜூலை 19 -ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 15 -ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலை பகுதிகள், ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்களிலும், ஜூலை 16-இல் நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூா், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலை பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு (மில்லி மீட்டரில்): சனிக்கிழமை காலை வரை பதிவான மழை அளவுப்படி, கீழச்செருவை (கடலூா்) - 230, லக்கூா் (கடலூா்) - 140, திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) - 130, ஆவடி (திருவள்ளூா்) - 110.
மேலும் சென்னை, மதுரை, விழுப்புரம், நீலகிரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, திருவள்ளூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பதிவாகியுள்ளது.
சென்னை, புகா் பகுதிகளில் ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளிலும், வங்கக் கடல், அரபிக் கடலிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை (ஜூலை 14-17) வரை மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...