மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

வரும்சனிக்கிழமை நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் வரும் சனிக்கிழமை (ஜூலை 20) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

News image

நியாயவிலைக் கடை(கோப்புப்படம்)

Updated On :17 ஜூலை 2024, 8:31 pm

மகளிா் உரிமைத் தொகைத் திட்டப் பணிகளுக்காக வேலை செய்த நிலையில், அதற்கு ஈடாக விடுமுறை விடப்படுவதாக உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ், பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை கடந்த ஆண்டு ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் நியாயவிலைக் கடைப் பணியாளா்கள் மேற்கொண்டனா்.

2 நாள்கள் பணிக் காலத்தை ஈடுசெய்யும் வகையில், ஜூன் 15-ஆம் தேதி ஒரு நாள் விடுப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் 20-ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.