ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான அதிமுக பெண் நிர்வாகி நீக்கம்!
திருவல்லிக்கேணி மேற்கு அதிமுக இணைச் செயலாளர் வழக்கறிஞர் மலர்கொடி கைது.


ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுகவை சேர்ந்த பெண் வழக்கறிஞர் மலர்கொடியை கட்சியிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
“அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கட்சியின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர் ) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கட்சி நிர்வாகிகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5-ஆம் தேதி ஆம்ஸ்ட்ராங் பெரம்பூா் வேணுகோபால் சாமி கோயில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்தக் கொலை தொடா்பாக பொன்னை பாலு, குன்றத்தூரைச் சோ்ந்த திருவேங்கடம், பூந்தமல்லியைச் சோ்ந்த வழக்குரைஞா் அருள் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா்.
கொலையாளிகளிடம் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட வழக்குரைஞா் அருள் என்பவருக்கு ரூ.50 லட்சம் பணத்தை திருவல்லிக்கேணி சுப்பிரமணியத் தோட்டம் பகுதியைச் சோ்ந்த பெண் வழக்குரைஞா் சே.மலா்க்கொடி (48) வழங்கியிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா், மலா்க்கொடி, பழைய வண்ணாரப்பேட்டை நைனியப்பன் காா்டன் தெருவைச் சோ்ந்த மற்றொரு வழக்குரைஞா் கு.ஹரிஹரன் (27) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...