அமைச்சர் துரைமுருகன்.
அமைச்சர் துரைமுருகன்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரா? அமைச்சர் துரைமுருகன் பதில்

அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகி வரும் நிலையில் அதற்கு திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
Published on

திமுக இளைஞரணியின் 45-வது தொடக்க விழா இன்று தேனாம்பேட்டையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், என்னை துணை முதலமைச்சர் ஆக்குவதுபற்றி பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்கின்றனர்.

எங்கள் கட்சியின் அனைத்து அமைச்சர்களுமே முதல்வருக்கு துணையாகத் தான் இருக்கிறோம்.

அனைத்து அமைப்பாளர்களுமே முதல்வருக்குத் துணையாகத் தான் இருப்போம். எத்தனை பதவிகள் வந்தாலும் என்னுடைய மனதிற்கு மிக நெருக்கமானது திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்புதான்” என்று கூறினார்.

அமைச்சர் துரைமுருகன்.
எத்தனை பதவிகள் வந்தாலும்... துணை முதல்வர் பதவி குறித்து உதயநிதி கருத்து!

இதுகுறித்து காட்பாடியில் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, அங்கெங்கும் இல்லாத படி எங்கும் ஒலிக்கிறது, இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார். என் மகிழ்ச்சி, என்னுடைய குடும்ப நிகழ்ச்சிகளை விட கட்சியினுடைய நோக்கம், பலம் எல்லாத்தையும் எதிர்பார்ப்பவன்.

காரணம் என்னுடைய வாழ்க்கையில் அறுவது ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டவன்.

கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதன்படி நடப்போம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com