கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி. சண்முகசுந்தரம் மறைவு

திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.பி. சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்.

News image

வி.பி. சண்முகசுந்தரம்

Updated On :20 ஜூலை 2024, 8:11 am

DIN

கோவை: கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி.பி. சண்முகசுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 75.

திமுக முன்னாள் எம்.பி.யான வி.பி. சண்முகசுந்தரம், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 98ஆம் ஆண்டு வரை கோபிசெட்டிப்பாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம். இவர் திமுகவில் பல முக்கிய பொறுப்புகளை வகித்து வந்தார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், சண்முகசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.பி. சண்முகசுந்தரம் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சியின் பற்றாளராக விளங்கிய வி.பி.சண்முகசுந்தரம், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர்.

இளம்வயது முதலே கட்சிப் பற்றாளராக விளங்கிய அவர், கட்சி அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கட்சி உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.