தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.
செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் பொன்முடி.
செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் பொன்முடி.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் இணையவழி பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் (2024-2025) அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்காக 2,53,954 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்களில் 1,99,868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

இதையடுத்து அவா்களுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஜூலை 10-ஆம் தேதி வெளியிட்டாா். இதில், 65 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றனா்.

செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் பொன்முடி.
இந்தியன் 2 படம் எப்படி இருக்கிறது: நடிகர் ரஜினிகாந்த் பதில்

இதையடுத்து பொறியியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 22) இன்று காலை தொடங்கியது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னையில் தொடங்கி வைத்தார்.

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 22-ஆம் தேதியும்(இன்று) பொதுப் பிரிவில் சிறப்பு பிரிவினருக்கு ஜூலை 25-ஆம் தேதியும் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

அதேபோல், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 29-ஆம் தேதி முதல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com