இந்தியன் 2 படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பின்னர் கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், கூலி படம் படப்பிடிப்பு நன்றாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியாகிய கமல் நடித்த இந்தியன் 2 திரைப்படம் பார்த்தேன், நன்றாக உள்ளது.
மேலும் வேட்டையின் திரைப்படம் எப்போது வெளியாகும் டப்பிங் பணிகள் எவ்வாறு போய்க்கொண்டு இருக்கின்றன என்ற கேள்விக்கு நன்றாக போய்க்கொண்டு இருக்கிறது என சிரித்தபடியே தெரிவித்தார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘இந்தியன் 2’ திரைப்படம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.